close
Choose your channels

'மிஷன் இம்பாஸிபிள் 2' நடிகருடன் இணைந்த 'கபாலி' நடிகை

Wednesday, September 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் நாயகியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே தற்போது ஆப்பிள் டிவிக்காக ஒரு வெப் சீரீஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த வெப் சீரீஸில் ராதிகா ஆப்தேவுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க் (Richard Roxburgh) நடிக்கவுள்ளார். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு டாம்குரூஸ் நடித்த ‘மிஷன் இம்பாஸிபிள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெப் சீரீஸில் Charlie Hunnam என்ற ஹாலிவுட் நடிகரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

’சாந்தாராம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சீரீஸ், டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய ‘சாந்தாராம்’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு தயாராகவுள்ளது. ஆஸ்திரேலியா சிறையில் இருந்து தப்பிக்கும் நாயகன், பின்னர் மும்பை ஸ்லம் ஏரியாவில் வேறு பெயரில் குடியேறி அந்த பகுதி மக்களின் ஹீரோவாக மாறுவதுதான் இந்த நாவலின் கதை ஆகும். இந்த வெப்சீரீஸ் படப்பிடிப்பு விரைவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.