close
Choose your channels

கணவரின் பெயரை தொடையில் டாட்டூ வரைந்த ரஜினி நாயகி!

Tuesday, May 7, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தின் நாயகியான ராதிகா ஆப்தே, தற்போது ஒரு ஆங்கில படம், இரண்டு இந்தி படங்களில் நடித்துவருகிறார். மேலும் ஒரு வெப்சீரிஸில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ராதிகாவின் தொடையில் 'B' என்ற எழுத்து டாட்டூ வரையப்பட்டுள்ளது. இது அவரது கணவர் பெனிடிக்ட் டெய்லரின் முதல் எழுத்து என்று கூறப்படுகிறது

ஏற்கனவே சமந்தா உள்பட பல நடிகைகள் தங்களின் அன்புக்குரியவர்களின் இனிஷியலை டாட்டூவாக வரைந்திருக்கும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது ராதிகா ஆப்தேவும் இணைந்துள்ளார்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz