close
Choose your channels

அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ராதிகா!

Wednesday, March 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம், அசல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரண், தற்போது 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் பிக்பாஸ் சீசன் 1 வின்னர் ஆரவ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை காவ்யா தாப்பர் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் நாசர், யோகி பாபு, 'பாகுபலி' காலகேயன் புகழ் பிரபாகர் போன்றோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ராதிகா இணைந்துள்ளார்.

தொலைக்காட்சி, திரைப்படம் என மாறி மாறி நடித்து வந்த ராதிகா, சமீபத்தில் தொலைக்காட்சி நடிப்புக்கு இரண்டு மாதங்கள் பிரேக் விடுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றுடன் 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் டப்பிங் பணியை முடித்த ராதிகா தற்போது 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு குகன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.