close
Choose your channels

சென்னையில் ராதிகா போட்டி: எந்த தொகுதியில் தெரியுமா?

Wednesday, March 3, 2021 • தமிழ் Comments

சமீபத்தில் ’சித்தி’ எந்த தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகிய நடிகை ராதிகா முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் தூத்துக்குடியில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ராதிகா கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ராதிகா சரத்குமார் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் அந்த தொகுதியில் அவரை வெற்றி பெற வைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது என்பதும் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz