பேரக்குழந்தைகளை அலற வைத்த ராதிகா; வைரலாகும் வீடியோ

நடிகை ராதிகா சரத்குமாரின் பேரக்குழந்தைகள் சந்தோசத்தில் அலறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ராயன், பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் என்பவரை திருமணம் செய்திருந்தார் என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் தெரிண்டதே.

இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற ராதிகா, அங்கு தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதுகுறித்த புகைப்படங்களையும் பதிவு செய்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து தற்போது சென்னை திரும்பி இருக்கும் ராதிகா தனது பேரக் குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுப் பொருள்களை வாங்கி குவித்துள்ளார். அந்த பரிசுப் பொருள்களை ஒவ்வொன்றாக அவர் எடுத்து பேரக்குழந்தைகளுக்கு கொடுக்க, அந்த பொருட்களை பார்த்தவுடன் குழந்தைகள் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் அலறிய சத்தம் சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது.

இது குறித்த வீடியோவை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

முதலில் BMW கார், அடுத்து துபாயில் வீடு: பிக்பாஸ் நடிகைக்கு பரிசுகளை குவிக்கும் காதலர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு முதலில் BMW கார் வாங்கி கொடுத்த அவரது காதலர், தற்போது துபாயில் வீடு வாங்கி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தோத்தவன் செத்துருவான், ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோடு இருப்பான்: 'அக்னி சிறகுகள்' டீசர்

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் நவீன் இயக்கத்தில் உருவான 'அக்னி சிறகுகள்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தனுஷ் படத்தில் விருப்பமில்லாமல் பணிபுரிந்தேன்: விக்னேஷ் சிவன்

தனுஷ் நடித்த படத்தில் விருப்பமில்லாமல் பணிபுரிந்தேன் என இயக்குனர் விக்னேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அண்ணாமலை படத்தின் டீசர் வெளியீடு திடீர் நிறுத்தி வைப்பு: என்ன காரணம்?

பாஜக தலைவர் அண்ணாமலை நடிக்கும் படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த டீசர் வெளியீடு நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல்

மதுக்கிண்ணத்தின் முன் பிக்பாஸ் மதுமிதா: செம வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா,  மது கிண்ணத்தின் முன் உட்கார்ந்து  போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.