ரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான ’அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று முதல் ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவரின் 45 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ராதிகா திரையுலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’கிழக்கே போகும் ரயில்’. இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா ’பாஞ்சாலி’ என்ற கேரக்டர் மூலம் அறிமுகமானார் என்பதும், அவரது கேரக்டரை சுற்றி தான் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் கடந்த 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது. இதனையடுத்து இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 42 வருடங்கள் ஆனதை அடுத்து நடிகை ராதிகா தனது சமூகத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் இவ்வளவு தூரம் திரையுலகில் பயணம் செய்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, நான் என்னுடைய வேலையை தினமும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, எனக்கு சிறந்ததைக் கொடுத்து, என் வேலையை செய்து வருகிறேன். அதுதான் இந்த பயணத்தை எனக்குக் கொடுத்தது. அனைவருக்கும் நன்றி’ என்ரு தெரிவித்துள்ளார்.

நேற்று ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் 45 ஆண்டு திரையுலக பயணம் குறித்து ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்று ஒரு டுவிட்டை பதிவு செய்தார். ரஜினியும் ராதிகாவும் அடுத்தடுத்து தங்களது 45 மட்டும் 42 ஆண்டு திரையுலக பயணத்தை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள்: உச்சநீதிமன்றத்தில் UGC தெரிவித்த இறுதிமுடிவு!!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் நடத்தப் படவில்லை

மும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!!! அச்சமூட்டும் கடத்தல் பின்னணி!!!

நவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.

அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ! 

நடிகரும் திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கருணாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

கொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம்!!! சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு!!! தமிழக அரசின் அதிரடி!!!

கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்து உள்ளது

முதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாய்ஸ். இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க இளமை பொங்கி வழியும் என்பதால் இளைஞர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய