ரூ.100 கோடி பட்ஜெட் படத்தில் ராகவா லாரன்ஸ்? சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் தான் இயக்குனர்..!

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும் இந்த படத்தை சூப்பர் ஹிட் படம் எடுத்த இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிசியான நடிகராக தற்போது ராகவா லாரன்ஸ் உள்ளார் என்பதும் கடந்த ஆண்டு அவர் நடித்த ’ருத்ரன்’ ‘சந்திரமுகி 2’ மற்றும் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் ’அதிகாரம்’ ’துர்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் 100 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை கோல்ட் மைன்ட் ஃபிலிம்ஸ் மற்றும் சத்ய ஜோதி மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இயக்குனர் வெங்கட் மோகன் கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால், ராஷி கண்ணா நடித்த ’அயோக்யா’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

மன்சூர் அலிகானை கட்சியில் இருந்து நீக்கிய பொதுச்செயலாளர்.. உலகில் இதுதான் முதல் முறை..!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் ஒரு சில நாட்களில் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை

இங்க கண்டனம் தெரிவிக்கிறது கூட SHARE பண்ணி தான் பண்ணுவானுங்க.

சின்ன குழந்தை , வயசுப் பொண்ணு,வயசான பாட்டி யாராக இருந்தாலுமே அவர்களுக்கு இருப்பது பெண்ணுறுப்பு .இந்த சமூகம் அதை தான் பார்க்கிறது ..................

நடிகர் எஸ்.வி.சேகருக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத தண்டனை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

நடிகர் எஸ்வி சேகருக்கு எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்த நிலையில் இந்த வழக்கில் எஸ்வி சேகர்

'பைக் டாக்சி' திரைப்படம்.. பூஜையுடன் இனிதே தொடங்கிய படப்பிடிப்பு!!

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம்

'லொள்ளு சபா' நடிகர் சேஷுவுக்கு என்ன ஆச்சு? காவேரி மருத்துவமனையில் அனுமதி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதை வென்ற நடிகர் சேஷு, திடீரென சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.