இதை செய்ய தயாரா? ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் சவால்

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வந்தது தெரிந்ததே. ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் எந்தவித பதிலையும் அளிக்காத நிலையில் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

ஸ்ரீரெட்டி கூறும் குற்றச்சாட்டுக்களின்படி பார்த்தால் தான் 'ரிபல்' என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தபோது தன்னை ஓட்டல் அறையில் சந்தித்ததாக கூறுகிறார். மேலும் ஓட்டல் அறையில் நான் சாமி படங்களையும் வைத்ததாக கூறியுள்ளார். ஓட்டல் அறையில் யாராவது சாமி படங்களை வைத்து பூஜை செய்வார்களா?

ஸ்ரீரெட்டிக்காக நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். தற்போது அவருக்குள்ள ஒரே பிரச்சனை தனக்கு யாரும் சான்ஸ் தரவில்லை என்பதுதானே. என்னுடைய அடுத்த படத்திலேயே அவருக்கு நான் சான்ஸ் தர தயார். ஆனால் அதற்கு முன்னர் அவர் தனது நடிப்புத்திறமையை நிரூபிக்க வேண்டும். நான் கூறும் ஒருசில சிம்பிள் ஸ்டெப்ஸ்களுக்கு நடனம் ஆடி, நான் கூறும் காட்சிகளுக்கு அவர் நடித்து காட்டினால் பத்திரிகையாளர்கள் முன் அவரை என் படத்தில் ஒப்பந்தம் செய்து முன்பணமும் தர தயாராக இருக்கின்றேன். இந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஸ்ரீரெட்டி தயாரா? என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இதற்கு ஸ்ரீரெட்டி என்ன பதிலளிக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

கருணாநிதி, ஓபிஎஸ் குறித்து யோகிபாபு கூறியது என்ன?

இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களில் ஒரு படத்திலாவது அவர் நடித்திருப்பார்

அடுத்த கமல் யார்? கஸ்தூரியின் டுவீட்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாத நிலையில் அடுத்த கமல் யார் என்பது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

போராளி என்ற வார்த்தைக்கு சொந்தமானவர் கருணாநிதி: விஷால்

இந்த நிமிடத்தில் இருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதியைக்கு சொந்தமானது.

த்ரிஷாவின் 'மோகினி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி

பிரபல நடிகை த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்த 'மோகினி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' அசத்தலான ஓப்பனிங் வசூல்

விஜய்சேதுபதி, சாயிஷா நடிப்பில் கோகுல் இயக்கிய 'ஜூங்கா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.