கலாமின் காலடி சுவட்டில் ராகவா லாரன்ஸின் ரூ.1கோடி

  • IndiaGlitz, [Tuesday,August 04 2015]

பிரபல இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ராகவா லாரன்ஸ் ஒரு சினிமாக்கலைஞராக மட்டுமின்றி சமூக தொண்டிலும் தன்னை இணைத்து கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. பெற்ற தாய்க்கு கோயில் கட்டியது, ராகவேந்தருக்கு கோயில் கட்டியது ஆகியவை இவரது உயரந்த உள்ளத்தை காட்டியது. மேலும் இவர் லாரன்ஸ் சாரிட்டபிள் டிரன்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு நடனப்பயிற்சி, இல்லம், கல்வி, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு, மருத்துவம் ஆகிய உதவிகளை செய்து வருகிறார்.


இவரது அறக்கட்டளை “லாரன்ஸ் சேரிட்டபிள் ட்ரஸ்ட்” என்கிற பெயரில் சென்னையில் அரசாங்கம் சாராத “தன்னார்வ தொண்டு நிறுவனமாக” 2006 ஆம் ஆண்டில் இருந்துஇயங்கி வருகின்றது. மேலும் 6 மாதகாலத்திற்கு ஒருமுறை அறக்கட்டளை கூட்டம் நடத்தப்பட்டு நிதி உதவி அளிப்பவர்களுக்கு வருமாக வரி விலக்கு சான்றிதழும் அளிக்கப்பட்டு மிகவும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் ராகவா லாரன்ஸ் அவர்களின் ரசிகர்கள் ஒன்றிணைந்து 'கலாமின் காலடிச்சுவட்டில்' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். இந்த அமைப்பிற்கு லாரன்ஸ் ரூ.1கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். மற்றவர்கள் போல் அவரது கனவை நிறைவேற்றுவோம் என்று வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் உடனடியாக செயலில் இறங்கி அதற்கு நிதியுதவியும் அளித்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

இரண்டு வாரங்களில் பிரசன்னாவுக்கு புரமோஷன்

ஃபைவ் ஸ்டார்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அழகிய தீயே, அஞ்சாதே, சென்னையில் ஓர் நாள், புலிவால் போன்ற பல படங்களில் நடித்த நடிகர் பிரசன்னா...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு. நடிகை குஷ்புவின் அதிரடி கருத்து

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது...

3500 தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது 'புலி'

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்த படக்குழுவினர் அடுத்ததாக இந்த படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்...

டி.ராஜேந்தரின் அடுக்கு மொழி பேச்சால் சீறிய 'புலி' இசை விழா

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் இசையமைப்பாளர்...

கமல்-விஜய்க்கு மறக்க முடியாத நாளாக மாறிய ஆகஸ்ட்-2

நேற்றைய நாளான ஆகஸ்ட் 2ஆம் தேதி விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு...