ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தின் முக்கிய அப்டேட்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Sunday,March 05 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிய ‘ருத்ரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ருத்ரன். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் படப்பிடிப்பு தாமதம் காரணமாக ரிலீஸ் செய்து தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முழுமையான படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
 

More News

ஜெயம் ரவியின் 'அகிலன்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? 

ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அதிக பார்வையாளர்களை கொண்ட படம்.. ஜோதிகாவுக்கு முதலிடம், விஜய்க்கு இரண்டாமிடம்..!

தமிழ் திரைப்படங்கள் ஹிந்தியில் டப் செய்து யூடியூபில் வெளியான படங்களில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட படம் ஜோதிகா நடித்த படம் என்றும் இரண்டாவது ஆக விஜய் நடித்த படம் என்றும்

'விஸ்வரூபம்' பூஜா குமார் மகளா இவர்? ரசிகர்களின் ஆச்சரிய கமெண்ட்ஸ்..!

கமலஹாசன் உடன் 'விஸ்வரூபம்' என்ற திரைப்படத்தில் நடித்த பூஜா குமார் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் பூஜா குமாரின் மகளா இவர்? என ஆச்சரியத்துடன்

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஜோதிகாவின் சகோதரி.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவின் சகோதரி நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிரசவ வலியால் துடிப்பு.. குழந்தை பிறந்தவுடன் கிடைத்த ஆனந்தம்.. வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை..!

பிரசவ வலியால் துடித்ததையும்,அதன் பின் குழந்தை பிறந்தவுடன் கிடைத்த ஆனந்தத்தையும் சீரியல் நடிகை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.