close
Choose your channels

'சந்திரமுகி 2' படத்தில் இந்த பிரபல நடிகையா? 

Monday, June 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகயிருக்கும் ’சந்திரமுகி 2’ படத்தில் ராஷிகண்ணா அல்லது ஆண்ட்ரியா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’சந்திரமுகி 2’ திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி என்றும் இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

லைகா புரடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் த்ரிஷா இந்த படத்தில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.