சூப்பர் ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் லாரன்ஸ்!

  • IndiaGlitz, [Saturday,November 02 2019]

ராம்சரண்தேஜா, சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இந்த படம் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தெலுங்கு மொழியிலேயே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது

ரங்கஸ்தலம் தெலுங்கு ரீமேக் உரிமையை ராகவா லாரன்ஸ் பெற்றுள்ளதாகவும், இந்த படத்தில் அவர் ராம்சரண் தேஜா வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது

தற்போது காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் படமான ’லட்சுமி பாம்’ என்ற படத்தில் பிஸியாக இருக்கும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஒரு படத்தில் நடித்து இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'பிகில்' கேப்டனுக்கு நயன்தாரா கொடுத்த பிறந்த நாள் பரிசு!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்யின் இரண்டு கேரக்டர்களில்

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி

அமேசான் எடுத்த அதிரடி முடிவு: சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி

அமேசான் நிறுவனம் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வந்து கொடுக்கும் சேவையை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. உட்கார்ந்த இடத்திலிருந்தே மக்கள் அனைத்து பொருட்களையும் அமேசான்

விஜய் டிவி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்: மீராமிதுன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சைக்குரியவராக இருந்த நிலையில்

டிக்டாக் ஓனர் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

டிக்டாக் செயலி குறித்து அறியாத நபர்கள் இருக்க முடியாது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.