ராகவா லாரன்ஸ்-ஜிவி பிரகாஷ் இணையும் புதிய பட அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

பிரபல நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி முடித்துள்ள ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது, இதனை அடுத்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’, ’ஆடுகளம்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜிகிர்தண்டா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் பணத்தை வாங்கி தான் அவர் கொரோனா நிதியாக பொதுமக்களுக்கு கோடிக்கணக்கில் அளித்தார் என்றும் செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் இந்த படம் குறித்த அறிவிப்பு தற்போது அதிரடியாக வெளியாக உள்ளது. ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 7வது திரைப்படமான இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் வரும் 29 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணையும் இந்தப் படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது

More News

தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் இளம் நடிகரா? செல்வராகவனின் திடீர் திட்டம் 

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்த படம் 'காதல் கொண்டேன் 2' என்றும் கூறப்படுகிறது

ரசிகர்களின் கொரோனா பயத்தை நடிகர்கள் போக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் யோசனை

ரசிகர்கள் மற்றும் பொது மக்களின் பயத்தை போக்க நடிகர்கள் இதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுள்ளார் 

நீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு!

சிம்பு நடித்துவரும் 'ஈஸ்வரன்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

நயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி? வைரலாகும் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும்

நீ யார் கேட்குறதுக்கு? முதல்முதலாக பொங்கிய சம்யுக்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு தங்கச்சுரங்கம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.