close
Choose your channels

தூய்மை பணியாளர்களுக்காக ராகவா லாரன்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை!

Tuesday, April 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ரூ.3 கோடி கொரோனா தடுப்பு நிதியாக வழங்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா நேரத்தில் இரவு பகல் பாராது தங்கள் உயிரையே பணயம் வைத்து பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்காக ரூ.25 லட்சம் தற்போது அவர் நிதியாக வழங்கியதோடு அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்திரிக்கை மற்றும் ‌ஊடகத்துறை நண்பர்கள் ‌அனைவருக்கும்‌ என்‌ இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்‌. இன்று தமிழ்புத்தாண்டு, நாம்‌ அனைவரும் வீட்டில்‌ இருக்கிறோம்‌. இந்த தருணத்தில் மருத்துவர்களாக, செவிலியர்களாக, காவலர்களாக, தூய்மை பணியாளர்களாக, நமக்காக பணிபுரிந்து கொண்டிருக்கும் மனித உருவில்‌ வாழும் கடவுள்களுக்கு வாழ்த்துக்களையும்‌, நன்றியையும் தெரிவித்துக்‌ கொள்றேன்‌.

இன்று காலை ராகவாலாரன்ஸ்‌ அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூற தொலைபேசியில்‌ அழைத்து இருந்தேன்‌. அப்போது அவர் பேசும்போது, “அண்ணா, நாம் வீட்டிற்கு வாங்கி வரும் ‌அத்தியாவசிய பொருட்களையே 12 மணிநேரம் வெளியில் வைக்கும் ‌இச்சமயத்தில்‌, நம் வீட்டு குப்பைகளை முகம் சுளிக்காமல் தினமும்‌ எடுத்து செல்லும் தூாய்மை பணியாளர்களுக்கு ௨தவி செய்ய விரும்புவதாகவும்‌, தாங்கள்‌ எனக்கு கொடுக்கவிருக்கும்‌ சம்பளத்தொகையில் ‌25 லட்சம் ரூபாயை தூய்மைபணியாளர்களுக்கு, அவர்களின் வங்‌கிகணக்கில் நேரிடையாக சென்றடைய வழிசெய்யுமாறும்‌ கூறினார்‌”. இத்தகைய நல்லுள்ளம் கொண்ட ராகவாலாரன்ஸ்‌ அவர்களுடன்‌ இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்‌.

ஆகவே ராகவாலாரன்ஸ் ‌அவர்களின் விருப்பபடி 25லட்ச ம்ரூபாயை தூய்மைபணியாளர்களின் வங்கிகணக்கில் செலுத்தவுள்ளோம்‌. எனவே தூய்மை பணியாளர்கள் தங்களின்‌ அடையாள அட்டை மற்றும்‌ அடையாள
அட்டையில்‌ உள்ள நபரின் வங்கிகணக்கு எண் விவரங்களை கீழ்க்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்‌அப் மூலம்‌ அனுப்புமாறும்‌, இதற்கு ஊடக மற்றும்‌ பத்திரிக்கைதுறை நண்‌பர்கள்‌ உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்‌.

வாட்ஸ்‌அப்‌ எண்‌: 6382481658

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.