close
Choose your channels

'காஞ்சனா 4' படத்தில் இந்த பிரபல நடிகையா? ராகவா லாரன்ஸின் கச்சிதமான தேர்வு..!

Saturday, June 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா’ திரைப்படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நான்காம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் பிரபல நடிகையை ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

’காஞ்சனா’ படத்தின் முதல் பாகத்தில் ராய் லட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் டாப்ஸி மற்றும் நித்யா மேனன் ஆகிய இரண்டு நடிகைகள் சூப்பர் கேரக்டரில் நடித்திருந்தனர். இதனை அடுத்து ’காஞ்சனா’ மூன்றாம் பாகத்தில் ஓவியா, வேதிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது நான்காம் பாகத்தில் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘சீதாராமம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் என்பதும் அதன் பிறகு சமீபத்தில் வெளியான விஜய் தேவரகண்டாவின் ’ஃபேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்ததும் தெரிந்ததே. இவருடைய தேர்வு ’காஞ்சனா 4’ படத்தின் நாயகி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’காஞ்சனா 4’ படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment