close
Choose your channels

ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, August 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும், நடன இயக்குநரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அக்சய்குமார் நடித்து வரும் லட்சுமிபாம்' என்ற இந்தி படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகியதும் அதன் பின் நடந்த சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து மீண்டும் இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே

அக்சயகுமார் மற்றும் கைரா அத்வானி முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அக்சயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படம் தமிழில் வெளியான 'காஞ்சனா' முதல் பாகத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது

'காஞ்சனா' முதல் பாகத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் பாலிவுட் சூப்பர் அமிதாப்பச்சன் நடித்து வருகிறார். மஞ்ச் மிசுக் இசையில் வெற்றி ஒளிப்பதிவில் வர்மா படத்தொகுப்பில் உருவாக் இவரும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.