கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இந்த மாஸ் நடிகர் வில்லனா?
பிரபல நடிகர்கள் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, வினய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஹீரோக்கள் வில்லனாக அசத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் ‘விக்ரம்’ படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்குப் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் தற்போது வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ராகவா லாரன்ஸ் மாஸ் ஹீரோ மட்டுமின்றி இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் ’விக்ரம்’ படத்தில் வில்லனாக நடித்தால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தர்பார்’ ஆடியோ விழாவில் கமல்ஹாசன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராகவாலாரன்ஸ் பேசினார் என்பதும் அதன் பின்னர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அது குறித்து விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.