த்ரிஷா, ஆண்ட்ரியா, ராஷிகண்ணா யாருமில்லை: இவர் தான் 'சந்திரமுகி 2' நாயகி!

  • IndiaGlitz, [Friday,July 08 2022]

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சந்திரமுகி 2’ படத்தின் நாயகி குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை பி வாசு இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் முதலில் ராஷி கண்ணா அல்லது ஆண்ட்ரியா நாயகியாக நடிப்பார் என்றும் அதன்பின்னர் த்ரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேற்கண்ட மூவரும் இல்லை என்றும் லட்சுமிமேனன் தான் இந்த படத்தின் நாயகி என்றும் கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் ’சந்திரமுகி’ முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் மைசூரில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

நாளையும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கிய அப்டேட்டா?

கடந்த சில நாட்களாக 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டர்கள் அட்டகாசமாக வெளிவந்து இணையங்களை வைரலாக்கியது என்பதை பார்த்தோம். அது மட்டுமின்றி இன்று மாலை 6 மணிக்கு வெளியான 'பொன்னியின்

'பத்து தல' படப்பிடிப்பு: இயக்குனருடன் சிம்பு  இருக்கும் புகைப்படம் வைரல்!

நடிகர் சிம்பு நடித்துவரும் 'பத்து தல'  படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்க இருந்தது. இந்த படப்பிடிப்பில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் மோதும் காட்சிகள் படமாக்க . 

சந்தானம் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: குலுங்க குலுங்க சிரிக்க ரெடியா இருங்க!

நடிகர் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

பிரமாண்டம் என்றால் இதுதான்: 'பொன்னியின் செல்வன்' டீசர் ரிலீஸ்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' டீசர் இன்று மாலை சரியாக ஆறு மணிக்கு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களுக்கு சவால் வீடியோ வெளியிட்ட சன்னிலியோன்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழில் அவர் நடித்து வரும் ' ஓ மை கோஸ்ட்' எ