பிரபல நடிகர் கட்டப்போகும் திருமண மண்டபம்.. ரசிகர்களுக்கு மட்டும் இலவசம்..!

  • IndiaGlitz, [Saturday,November 18 2023]

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் திருமண மண்டபம் ஒன்று கட்டப் போவதாகவும் அதில் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ’ஜிகர்தண்டா 2’ படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல்வேறு சமூக சேவை செய்து உள்ள நிலையில் தற்போது ரசிகர்களுக்காக ஒரு திருமண மண்டபம் கட்ட போவதாக தெரிவித்துள்ளார். அதற்கான இடத்தையும் பார்த்து விட்டதாகவும் தனது அம்மா பெயரில் கட்டப்பட இருக்கும் இந்த திருமண மண்டபத்தில் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது ரசிகர் ஒருவர் திருமண பத்திரிகை கொடுக்க வந்த போது எங்கே கல்யாணம் என்று கேட்டதாகவும், அதற்கு மண்டபம் எல்லாம் வைத்து நடத்த பணம் இல்லை, அதனால் கோவிலில் தான் திருமணம் என்று கூறினார்.

அவர் கூறியவுடன் தான் ரசிகர்களுக்காக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். இடமும் பார்த்து முடிவாகிவிட்டது. விரைவில் கட்டிட பணிகள் தொடங்கும். அதில் எனது ரசிகர்களுக்கு இலவசம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.

மேலும் ’ஜிகர்தண்டா 2’ படம் குறித்தும் கார்த்திக் சுப்புராஜ் குறித்தும் அவர் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'லியோ'வை அடுத்து அமைச்சர் உதயநிதி பாராட்டிய திரைப்படம்.. வைரலாகும் பதிவு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி பாராட்டிய நிலையில் அடுத்ததாக நேற்று வெளியாகியுள்ள 'ஏழு கடல்  தாண்டி' என்ற படத்தை பாராட்டி அவர்

மாதவன் - கங்கனா நடிக்கும் புதிய திரைப்படம்.. இயக்குனர் இந்த பிரபலம் தான்..!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஏற்கனவே தமிழில் 'தலைவி' மற்றும் 'சந்திரமுகி 2' ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மாதவனுடன் மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லேபில்' சீரிஸின் நான்காவது எபிசோட்.. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'லேபில்' சீரிஸின் நான்காவது எபிசோட் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. நடிகர்கள் ஜெய் மற்றும் தான்யா ஹோப்

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, சாய் பல்லவி, ஏ.ஆர்.ரஹ்மான்? மாஸ் தகவல்..!

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஏ =ஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.  

'ஜிகர்தண்டா 2' ஹீரோயின் அழகாக இல்லையா? செய்தியாளர் கேள்விக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் நாயகி அழகாக இல்லை என்று கூறிய செய்தியாளருக்கு