close
Choose your channels

கமல் படத்தில் நடிக்க மறுத்தாரா ராகவா லாரன்ஸ்?

Friday, December 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், கமலஹாசன் குறித்து கூறிய ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த கருத்துக்கு ராகவா லாரன்ஸ் உரிய விளக்கம் அளித்த பின்னரும் இந்த சர்ச்சை ஒரு சில நாட்கள் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் பிசியாக இருப்பதன் காரணமாக அந்த படத்தில் நடிக்க இயலாது என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது

ராகவா லாரன்ஸ் தற்போது ’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக் படமான ’லட்சுமி பாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அக்சயகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இதனை அடுத்து அவர் ’காலபைரவா’ என்ற படத்தில் நடித்து இயக்கவுள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருப்பதால் லாரன்ஸ் அவர்களால் ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.