காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும்: முருகன் விவகாரம் குறித்து ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Thursday,July 16 2020]

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகஷ்டி கவசம் குறித்து அருவருப்பான விமர்சன வீடியோ வெளியானதில் இருந்து முருகபக்தர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். இந்து மத ஆதரவாளர்கள் மட்டுமின்றி பிற மதத்தை சேர்ந்தவர்களும் இந்த சேனலுக்கு தங்களது கண்டனத்தை வருகின்றனர்.

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

அனைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம். இன்று கிருத்திகை, எனவே நான் உங்கள் அனைவருடனும் ஒருகருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் கந்த சஷ்டி கவசத்தை கேட்டு வளர்ந்தவன் நான். என் அம்மா அதை தினமும் என்னிடம் காலையில் படித்து காட்டுவார். அதன் சக்தியை நான் அறிந்து உணர்ந்துள்ளேன். கந்தசஷ்டி கவசம் என்னை பாதுகாத்த ஒரு கேடயம் என்பதை நான் நம்புகிறேன்.

எங்கள் வீட்டில் உள்ள முருகன் சிலையை நான் தினமும் வணங்குவேன். நான் இன்று எதற்காக சொல்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஏற்கனவே அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதைப் பற்றி அதிகமாக பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். முருகனின் அழகு, அன்பு மற்றும் சக்தியை பாருங்கள். அதற்கு முன் எல்லாமே ஒன்றுமே இல்லை. காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 

More News

8 வருஷமா மெனக்கெட்டு கட்டின பாலம் ஒரு மாதம்கூடத் தாங்கல… சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

பீகார் மாநிலத்தில் 8 வருஷமாக கட்டப்பட்ட பாலம் ஒன்று கடந்த மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

சராசரியாக தினமும் 60ஐ தாண்டும் பலி எண்ணிக்கை: தீவிரமடைகிறதா கொரோனா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சராசரியாக 4000ஐ தாண்டி வரும் நிலையில் தினமும் சராசரியாக 60 பேர்களுக்கும் மேல் கொரோனாவால்

தமிழக பள்ளி மாணவர்கள் இனி தொலைக்காட்சியில் பாடம் படிக்கலாம்!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!

தமிழக அரசு, கல்வி தொலைக்காட்சியை நிறுவி அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

அமித்ஷாவிடம் கைகூப்பி கோரிக்கை விடுத்த சுஷாந்த் சிங் காதலி!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படுகிறதா திரையரங்குகள்? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள்