ரஜினி அவர்கள் இரண்டு வார்த்தை பேசினால் அதுதான் இன்றைக்கு செய்தி: ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பேசிய மாஸ் பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவர் பேசியதாவது:

அதிசயம் - அற்புதம், இரண்டும் பல காலமாக உள்ள வார்த்தைகள்தான், ஆனால் ரஜினி சொன்னவுடன் தமிழகமே அதிர்ந்துவிட்டது. ரஜினி அவர்கள் இரண்டு வார்த்தை பேசினால் அதுதான் இன்றைக்கு செய்தி. தலைவருக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்க, வந்தபிறகு தெரியும் அவருக்கு எந்த அளவுக்கு அரசியல் தெரிஞ்சிருக்குன்னு. அதேபோல் அவருக்கு வயசு ஆயிருச்சுன்னு சொல்றாங்க, ஆனால் அவரு நடக்கும்போதே தெரியும் அவருக்கு என்ன வயசாயிருச்சுன்னு..

தலைவர் ரஜினி அவர்கள் 96லேயே முதல்வர் ஆகியிருப்பார். ஆனால் வந்த பதவியை வேண்டாம் என்று கூறிய ஒரே தலைவர் நம் தலைவர் தான். அவருக்கு அப்போ பதவி தேவையில்லை. ஆனால் இப்போது அவருக்கு பணம், புகழ், பப்ளிசிட்டி எல்லாம் நிறைய இருக்கு,. பப்ளிசிட்டிக்காக அரசிலுக்கு வர்றாருன்னு சொல்றாங்க. சூப்பர் ஸ்டாருங்கிறதே ஒரு பெரிய பப்ளிசிட்டிதான. இதைவிட வேற என்ன பப்ளிசிட்டி வேணும்’

முருகதாஸ் படத்தில் கண்டிப்பாக ஏதாவது மெசேஜ் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தலைவருடன் நீங்கள் இணைந்திருப்பதால் கண்டிப்பாகப் பெரிய மெசேஜாகத்தான் இருக்கும். லைகாவும் இணைந்திருப்பது பாட்ஷாவைவிட மாஸாக இருக்கும் என எதிர்பார்ப்போம்.

ரஜினி எனக்கு குரு. அவர் செயல்பாடுகள்தான் நான் செய்யும் பல நல்ல காரியங்களுக்கு முக்கியக் காரணம். அவர் இதுவரை யாரையும் திட்டியதில்லை. விடு கண்ணா பார்த்துக்கலாம் என்றுதான் சொல்லுவார். சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்ற தன்னடக்கம் பொறுமை யாருக்குமில்லை.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் பேசினார்.