தன்னலமின்றி 100% சரியான முடிவை எடுத்து உள்ளீர்கள்: ரஜினி குறித்து பிரபல இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சியை ஆரம்பிக்க போவதில்லை என்றும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் எடுத்து இருக்கும் இந்த முடிவுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கம் அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பேதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல்நலம் முக்கியம் என்று கருதி அவரது முடிவை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தற்போது வந்துள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்ற்னர்.

இந்த நிலையில் இந்த ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் ஒருவராகிய நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

நீங்கள் எடுத்த முடிவு 100% சரியானது. எங்களுக்கு எதையும் விட உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது. உங்களை நம்பும் நபர்களைப் பற்றி அக்கறை கொண்டு நீங்கள் தன்னலமற்ற முடிவை எடுத்து உள்ளீர்கள். நீங்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளீர்கள், அதுவே உங்களை மிகப் பெரியதாக ஆக்குகிறது. உங்களது உடல் ஆரோக்கியத்திற்காக எப்போதும் ராகவேந்திர சுவாமியை நான் பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

மாற்றத்தை உண்மையிலேயே விரும்பினால் கமலுக்கு ஆதரவு கொடுங்கள்: ரஜினிக்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்

ரஜினிகாந்த் உண்மையிலேயே தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்பினால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என பிரபல இயக்குனர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சிம்புவின் 'ஈஸ்வரன்' குறித்த மாஸ் அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

டசன் கணக்கில் பாம்புகள்… உடம்பு முழுக்க ஊர விட்டு மசாஜ்… இப்படி ஒரு புதுவரவா???

ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் , தாய் மசாஜ், ஸ்வீடிஷ் மசாஜ் எனப் பல வகையான மசாஜ்களை கேள்விப் பட்டு இருப்போம்.

தலைவா... வா...வா: ரஜினி வீட்டின் தர்ணா போராட்டம் நடத்திய ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31ஆம் தேதி அரசியல் வருகையை அறிவித்துவிட்டு ஜனவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கி வரும் மே மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் களம் இறங்குவார்

இளம் நடிகரின் மூன்றாவது படத்திற்கு உதவி செய்த லாவண்யா திரிபாதி!

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கிரண் அப்பாவரம் நடிக்கும் மூன்றாவது படத்தின் ஒரு காட்சியில் நடிகை லாவண்யா திரிபாதி வெளியீட்டு உதவி செய்துள்ளார்