ஒரே நாளில் 2 புதிய படங்கள்.. லோகேஷ் படத்தை அடுத்து இன்னொரு ராகவா லாரன்ஸ் படம்..!

  • IndiaGlitz, [Sunday,April 14 2024]

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் லோகேஷ் நாகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக இன்று காலை செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இன்னொரு படத்தின் அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ’ஹண்டர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்க இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்த படம் ராகவா லாரன்ஸின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

விஷாலின் முக்கிய அரசியல் அறிவிப்பு.. 2026ல் விஜய் vs விஷாலா?

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்த நிலையில் விஷாலும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணையும் விகடன் டெலிவிஸ்டாஸ்..  'உப்பு புளி காரம்'  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டுள்ளது.

'கோட்' ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு சிஎஸ்கே தாரக மந்திரம்.. தளபதி விஜய்யின் முக்கிய அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு விருந்தாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது

ஆர்ஜே விஜய் ஹீரோவாக நடிக்கும் படம்.. ஹீரோயின் இந்த பிரபலமா? ஸ்னீக்பீக் வீடியோ!

கடந்த பல வருடங்களாக தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பட்டிமன்ற பேச்சாளராகவும் இருக்கும் ஆர்ஜே விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக்

பிரபல ஹீரோவுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா.. டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வீடியோ..!

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகருடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக