பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்
- IndiaGlitz, [Sunday,March 26 2017]
ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்த நிலையில் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கிஅ 'சிவலிங்கா' ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
'பார்த்திபன் கனவு', 'பிரிவோம் சந்திப்போம்', 'ஜன்னல் ஓரம்' உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய இயக்குனர் கரு.பழனியப்பனின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தை 'சிவலிங்கா' படத்தை தயாரித்த டிரிடெண்ட் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சிவலிங்கா படத்தின் ரிலீசுக்கு பின்னர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.