2 முக்கிய காரணங்களுக்காக ரஜினியை சந்தித்த ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Friday,September 09 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களில் ஒருவரும், அவர் மீது மதிப்பிலடங்கா மரியாதை வைத்துள்ளவருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ரஜினியை சந்தித்தார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அவர் இரண்டு முக்கிய காரணங்களுக்காக ரஜினியை சந்தித்ததாக கூறப்படுகிறது
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'சிவலிங்கா' படத்தில் நடிப்பது குறித்து ரஜினியிடம் விளக்கி அவரிடம் வாழ்த்து பெறுவதற்கும், தனது தாயாருக்கும் காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவது குறித்து ரஜினியிடம் தெரிவித்து அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெறுவதற்கும் இந்த சந்திப்பை ராகவா லாரன்ஸ் பயன்படுத்தியுள்ளார்.
மேலும் தாயாருக்கும், காயத்ரி தேவிக்கும் கோயில் கட்டும் பணி இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த இரு கோவில்களும் திறக்கப்படும் என்றும் ராகவா லாரன்ஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

More News

விஜய்-தேனாண்டாள் கூட்டணியில் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது பிரமாண்டமான படமான 'சங்கமித்ரா' படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என்பதும்...

தமிழர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது. தமிழ் பட நாயகியின் சர்ச்சை பேச்சு

தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து...

விஜய்யின் கோபத்திற்கு காரணம் என்ன? சங்கவி விளக்கம்

அஜித்தின் முதல்படமான 'அமராவதி' பட நாயகியும், விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே, நிலவே வா போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை சங்கவி...

சிம்பு-அனிருத்தை இணைத்து வைத்த பேய்ப்பாடல்

கோலிவுட் திரையுலகில் இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வரும் முதல் திகில் படம் 'ரம்', இந்த படத்திற்காக சமீபத்தில் பேயோபோபிலியா...

'பாகுபலி' வியாபாரத்தை மிஞ்சிய சிரஞ்சிவி படம்

கடந்த சில வருடங்களாக அரசியலில் பிசியாக இருந்த சிரஞ்சீவி மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள படம் 'கில்லாடி நம்பர் 150' இளையதளபதி விஜய்...