இளைஞர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடத்தும் அடுத்த போராட்டம்

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது அதைவிட முக்கிய பிரச்சனையான நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் களமிறங்கவுள்ளார்.
நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க ராகவா லாரன்ஸ் காவல்துறையினர்களிடம் கேட்ட அனுமதி கிடைத்துவிட்டதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
விவசாயிகளை காப்பதற்காக நடத்தப்படும் இந்த உண்ணாவிரதத்தில் இளைஞர்கள் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More News

நெடுவாசல் போராட்டம் குறித்து நடிகர் சங்கத்தின் முக்கிய முடிவு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் போராடிய போராட்டத்திற்கு இணையாக தற்போது நெடுவாசல் போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

ஸ்டிக்கர் ஒட்டிய அன்புமணி ராமதாஸ் கைது

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழக அரசு இன்னும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஒருசில டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை.

புதிய சங்கம். பிரபல தமிழ் நடிகை அதிரடி அறிவிப்பு

சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்திய திரையுலகையே உலுக்கிய நிலையில் இன்னும் ஒருசில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படுத்தினர்....

குஷ்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

முன்னாள் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் இன்று  அதிரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது...

இன்று முதல் வெளிநாட்டு பானங்களுக்கு மூடுவிழா. இளைஞர்களின் 2வது வெற்றி

கடந்த மாதம் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை திருப்பியது மட்டுமின்றி தமிழக மக்களிடையே பல்வேறு விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தியது.