'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் தடைகள் பலவற்றை தகர்த்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நாள் முன்னதாகவே அதாவது மார்ச் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு சலுகை தற்போது கிடைத்துள்ளது. இந்த தகவல் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில் இதுவே இந்த படத்தின் முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் நடித்த முந்தைய படமான 'காஞ்சனா' திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்ததால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யுமா? என்பதை நாளை மறுநாள் விமர்சனத்தில் பார்ப்போம்

More News

விவசாயிகளின் வீட்டுக்கு சென்று ரூ.1 கோடி பணம் கொடுப்பேன். ராகவா லாரன்ஸ்

தமிழக விவசாயிகளின் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றும் கர்நாடகம் ஒருபுறம், இருக்கும் நீரை வழிமறிக்கும் கேரளா ஒரு புறம், இதெல்லாம் போதாதென்று குடிநீருக்கே கஷ்டப்படும் அளவுக்கு பொய்த்துவிட்ட மழை ஒருபுறம் என்று பல விவசாயிகளை தற்கொலை எண்ணத்திற்கு கொண்டு செ

விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' சென்சார் தகவல்கள்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ரம் பிரபு நடிப்பில் 'சுந்தரபாண்டியன்' இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்ரியன்'.

இசைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் சூர்யா

தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சூர்யா, நடிப்பு மட்டுமின்றி 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த '36 வயதினிலே', 'பசங்க 2' ஆகிய இரண்டு தரமான படங்களாகவும், '24' திரைப்படம் மாஸ் படமாகவும் அமைந்தது...

மீனவர் பலி விவகாரம். தமிழர்களை கேவலப்படுத்தும் சுவாமி

இன்று அதிகாலை தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடு காரணமாக பலியான சோகத்தில் மீனவர்களும் தமிழக மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் இன்னொரு புறம் பாரதிய ஜனதா முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சை

'மாநகரம்' படம் பார்க்கலாமா?

2015ல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘மாயா’ படத்தைத் தொடர்ந்து , ‘Potential Studios' நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘மாநகரம்’. ..