மீண்டும் இணைகிறது 'சந்திரமுகி' கூட்டணி?

  • IndiaGlitz, [Friday,May 13 2016]

இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய 'ஷிவலிங்கா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவராஜ்குமார், வேதிகா நடித்த இந்த படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய பி.வாசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'சந்திரமுகி 2' என்ற பெயரில் ரஜினியை வைத்து பி.வாசு இயக்க முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால் ரஜினி தற்போது '2.0' படத்தில் பிசியாக இருப்பதால் தற்போது அவருக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'சந்திரமுகி' படத்தில் கலக்கலான காமெடி நடிப்பை தந்த வடிவேலு இந்த படத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

'கபாலி' டீசர் செய்த மற்றொரு சாதனை

கடந்த 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' டீசர் இணையதளத்தில் பெரும்புயலை கிளப்பியதோடு இந்திய அளவிலும், உலக அளவிலும் பல சாதனைகளை புரிந்தது என்பதை பார்த்தோம். இந்நிலையில் தற்போது இந்த டீசரின் மேலும் ஒரு சாதனை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்திய அளவில் இதுவரை அதிக பார்வையாளர்கள் ப

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெறவுள்ளது....

தேர்தலில் நிற்காமல் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கிய சிம்பு

இந்நிலையில் சிம்பு தனது பங்காக நேற்று ஒரு பாடலை யுடியூபில் வெளியிட்டார். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிம்பு வெளியிட்ட இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது...

சமந்தாவின் முதல் முயற்சி

'சமந்தா' நடித்த 'தெறி மற்றும் '24' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப்படமாகி உள்ளதால் உற்சாகமாக இருக்கும் அவர் அடுத்த படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.....

பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரன்னிங் டைம்

'ஜிகர்தண்டா' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹாவின் அடுத்த படமான 'கோ 2' நாளை பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. தேர்தல் சமயத்தில் வரும் அரசியல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'கோ 2' திரைப்படம் மொத்தம் 124 நிமிடங்கள் அĪ