ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

ராகவா லாரன்ஸ் நடித்த பெரும் எதிர்பார்ப்புக்குள்ள திரைப்படமான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 'காஞ்சனா' சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் ராகவா லாரன்ஸ் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'சிவலிங்கா' திரைப்படம் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று சற்றுமுன்னர் சமூக இணையதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள ராகவா லார்ன்ஸ் 'மொட்டசிவா கெட்டசிவா மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களையும் அடுத்தடுத்த வெற்றிப்படங்களாக்கி தனது இடத்தை தக்க வைத்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகவா லாரன்ஸ், ரித்திகாசிங், சதி, வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ள 'சிவலிங்கா' திரைப்படத்தை பி.வாசு இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

More News

சசிகுமாருடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்த முத்தையா அதன்பின்னர் கார்த்தி நடித்த 'கொம்பன்' மற்றும் விஷால் நடித்த 'மருது' ஆகிய வெ'ற்றிப்படங்களை இயக்கினார்...

விஜய் ஆண்டனியின் எமன்: பாசிட்டிவ் விமர்சனமும் தமிழக அரசின் வரிவிலக்கு...

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் இன்று அவர் நடித்த அடுத்தபடமான 'எமன்' உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகின்றது....

மு.க.ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: ரகசிய வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி உத்தரவா?

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக படுகொலை நடந்ததாகவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்காமல் தாங்கள் சபைக்காவலர்கள் மற்றும் போலீசாரால் வெளியேற்றப்பட்டதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்...

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்த விபரங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் போட்ட முதல் கையெழுத்து '500 டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவு என்பது அறிந்ததே...

அமைச்சர் ஜெயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு. நிதியமைச்சரும் அவர்தான்

மீன் வளத்துறை அமைச்சராக இதுவரை இருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய துறையை இதுவரை முதல்வரே ஏற்றிருந்தார்...