தலைவர் ரஜினி குறித்து தவறாக பேசுவதா? ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கை

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்து அதுகுறித்து ஒரு விளக்க அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். ரஜினியின் இலங்கை பயண ரத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில அரசியல்வாதிகளும், சமூக வலைத்தள பயனாளிகளும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர்கரும், நடிகர், இயக்குனருமான ராகவா லாரஸ்ன் இதுகுறித்து ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதை காண முடிகிறது.

நான் அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவர் இருக்கின்றார் என்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

பத்து பேர் பின்னால் இருந்தாலே கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர் என் தலைவர்

இரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர் படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு மூன்று வருடத்திற்கு ஒர் படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.,

பிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அனேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்

இந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும் போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல் , ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து பயணம் செய்பவர் அவர்

இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்

சிலர், தலைவரை குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குபவர்கள் அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

More News

மூன்றாவது வாரத்திலும் முன்னிலை வசூல் பெற்றுள்ள 'மாநகரம்'

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் இளையதலைமுறை இயக்குனர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி திரைப்படங்களை உருவாக்குவதால் முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அவர்களுக்கு அமைந்து வருகிறது...

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா ஆகிய நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வரும் நிலையில் ஜோதிகாவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் தான் 'மகளிர் மட்டும்'...

அஜித் ரசிகர்களின் ஆதரவால் கலக்கிய 'கட்டமராயுடு' ஓப்பனிங் வசூல்

தெலுங்கு மாநிலங்களில் பவர்ஸ்டர் பவன்கல்யாண் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு புதியவர்...

அஜித்தின் 'விவேகம்' தமிழ்படமா? ஹாலிவுட் படமா?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்தில் ஏகப்பட்ட வெளிநாட்டு கலைஞர்கள் பணியாற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பார் நயன்தாரா. ஹரிஷ் உத்தமன்

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நயன்தாரா ஏன் பொருத்தமானவர் என்பது குறித்து 'டோரா' இயக்குனர் தாஸ் ராமசாமி கூறியதை சமீபத்தில் பார்த்தோம்...