குப்பையை பொறுக்கி சம்பாதித்த பணத்தில் தனக்கு தானே சிலை வடித்த சுவாரசிய மனிதர்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 23 2020]

 

சேலம் அருகே சாலையில் குப்பையைப் பொறுக்கி சம்பாதித்த பணத்தில் ஒருவர் தனக்கு தானே சிலை வடித்து இருக்கிறார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அந்த நபர் என்னுடைய வாழ்நாள் முழுக்க சம்பாதித்த பணத்தை வைத்து நான் சிலை வடித்து இருக்கிறேன். இது என்னுடைய கனவு என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

சேலம் அத்தனூர் பட்டியில் வசித்து வந்த அந்த நபர் குடும்பத்தை விட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றிருக்கிறார். அடுத்து சேலம் மாநகரப் பகுதிகளில் தினமும் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் போன்றவற்றை பொறுக்கி தினமும் ரூ. 200-300 வரை சம்பாதித்து இருக்கிறார். தற்போது 2 நிலங்களைச் சொந்தமாக வாங்கியிருக்கம் அவர் தன்னுடைய சொந்த நிலத்தில் தனக்குத் தானே செலவு செய்து சிலையும் வைத்திருக்கிறார்.

இதுவரை நிலம் மற்றும் சிலை வடிவமைப்பு என ரூ 10 லட்சத்தை செலவு செய்திருக்கிறார். மேலும் இந்தத் தொகையை தனது வாழ்நாள் முழுக்க சம்பாதித்த பணம் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடவும் அவர் திட்டமிட்டு இருக்கிறாராம். வாழப்பாடி அருகே வைக்கப்பட்டுள்ள சிலையை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடம் பார்த்து செல்கின்றனர். தனக்குத் தானே சிலை வடித்துக் கொண்ட மனிதரைப் பார்த்து சிலர் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்து கின்றனர்.

More News

33 சிக்ஸர்கள், காணாமல் போன பல பந்துகள்: சிஎஸ்கே-ஆர்.ஆர் போட்டியின் சுவாரஸ்யங்கள்!

நேற்று சார்ஜாவில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம் 

ராஜஸ்தான் அடித்த 216 ரன்களில் 58 ரன்கள் இரண்டே ஓவர்களில்.. ஆச்சரிய தகவல்

நேற்று ஷார்ஜாவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 

நேற்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு மிஸ் ஆனது ஏன்?

ஐபிஎல் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில்

ரிலீசுக்கு தயாராகும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் தெரிந்ததே

இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தின் விசித்திரமான டைட்டில்!

தேசிய விருது பெற்ற பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் ரிலீஸாகாத நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை