close
Choose your channels

டிராவிட் கூறிய ஒரு வார்த்தையால் வெற்றிக்கோப்பை… இலங்கை கிரிக்கெட்டில் நடந்த அதிசயம்!

Wednesday, July 21, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகிலேயே “பி“ கிரிக்கெட் டீம் ஒன்று சர்வதேச கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது. அதுவும் துவண்டு போன இந்திய அணியை ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெற்றிப்பெற செய்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் “பி“ டீம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் செய்த காரியம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடருக்கு “பி“ கிரிக்கெட் டீமை அனுப்பி வைத்து இருக்கிறது பிசிசிஐ. இதற்கு பயிற்சியளாராக முன்னாள் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இளம் கிரிக்கெட் வீரர்களை வைத்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெறமுடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டித் தொடர் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை குவித்து இருந்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் அடித்து விளாசுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் படு சொதப்பலாக விளையாடினர்.

இதனால் முன்னணி வீரர்கள் பலரும் சொற்ப ரன்களுக்கே ஆட்டம் இழந்ததையும் பார்க்க முடிந்தது. இதில் ப்ரித்வி ஷா 13 ரன்களையும் ஷிகர் தவான் 29 ரன்களையும் இஷான் கிஷான் 1 ரன்னையும் மணிஷ் பாண்டே 37 ரன்களையும் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினர். அடுத்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் சூர்யகுமார் யாதவ் 53 ரன்களை விளாசி அவுட்டானர். இதனால் 40 ஓவர்களைத் தாண்டும்போதே இந்திய அணிக்கு தோல்வி உறுதிச் செய்யப்பட்டது.

இப்படி சரிந்து விழ இருந்த இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் நிதானமாக ஆடி காப்பாற்றி இருக்கிறார். அதுவும் 45 ஓவர் இருக்கும்போது பயிற்சியாளர் டிராவிட் கூறிய ஒரு வார்த்தையால் இந்த மேஜிக் நடந்து இருக்கிறது. முதலில் களம் இறங்கிய தீபக் சாஹர் நிதானமாக விளையாடி ரன்களைக் குவிக்க துவங்கினார். ஆனால் தொடர்ந்து அதிரடி காட்டத் துவங்கினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த டிராவிட் குளிர்பானம் கொடுக்க சென்ற தீபக்கின் சகோதரர் ராகுல் சாஹரிடம், ஆக்ரோஷம் இப்போதைக்கு வேண்டாம். ரிக்ஸ் ஷாட்களை தவிர்க்க வேண்டும் எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட தீபக் சாஹர் படு நிதானமாக விளையாடி 82 பந்துகளை சந்தித்து 69 ரன்களைக் குவித்தார். இதனால் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலேயே அரை சதம் அடித்து பல மூத்த வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

மேலும் 276 ரன்கள் இலக்கை தீபக் சாஹரின் அதிரடி விளையாட்டால் இந்திய அணி முறியடித்து இருக்கிறது. 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை குவித்த இந்திய அணி 2-0 என்ற வெற்றிக்கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.

தீபக் சாஹரின் இந்த முயற்சியைப் பார்த்து மிரண்டு போன டிராவிட் நேற்று தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து எழுந்து கைத்தட்டினார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. கூடவே இலங்கை பயிற்சியாளர்கள், வீரர்கள், சக வீரர்கள் எனப் பலரும் தீபக் சாஹரைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இந்த வெற்றிக்கான காரணம் குறித்து பேசிய தீபக், டிராவிட் கூறிய அந்த ஒரு வார்த்தைத்தான் வெற்றிக்கு காரணம் என்றும், அவர் ஒவ்வொரு பந்தையும் சந்திக்கச் சொன்னார் என்றும் கூறியிருந்தார். டிராவிட்டை புகழ்ந்து, தீபக் சாஹர் கூறிய இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.