நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020  - 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவினை சந்தித்து உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி  தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இது அரசியல் மட்டத்தில் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

“மோடியும் கற்பனை உலகில் சஞ்சரிக்கும் அவரது பொருளாதார ஆலோசகர்களும் நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றி விட்டனர்.  முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி – 7.5% ஆக இருந்தது. தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி – 3.5% குறைந்து விட்டது : பணவீக்கம் – 3.5% லிருந்து தற்போது 7.5% ஆக அதிகரித்து விட்டது” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘இந்தியப் பொருளாதாரத்தை சீர் செய்வதற்கு அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்த எந்த திட்டமும் இல்லாமல் பிரதமரும் நிதியமைச்சரும் செயல்படுவதாகக்’ ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய எம்.பி. யுமான ராகுல் காந்தி பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே பொருளாதாரம்  பற்றிய விவாதத்தைத் தொடங்கி இருக்கிறார்.  ‘பட்ஜெட் 2020’ ஹேஷ்டேக்குடன் பதிவிட்ட ராகுல் காந்தியின் டிவிட்டர் செய்தி தற்போது சமூக வலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

More News

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ்..! 6000 பேர் பாதிப்பு.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கிட்டத்தட்ட 6,000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் இரண்டு பரபரப்பான டுவிட்டுக்கள்!

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் பிசியாக இருந்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை ஆக்ரோஷமாக தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே

ராதாரவியுடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்த சின்மயி! பெரும் பரபரப்பு

டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.

பிரபல தமிழ் குணசித்திர நடிகர் காலமானார்!

வைதேகி காத்திருந்தாள், சிந்துபைரவி, விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் டிஎஸ் ராகவேந்திரா இன்று காலமானார்

சென்னையில் சுயாதீனத்  திரைப்பட விழா

சென்னையில் தமிழ் ஸ்டூடியோ என்ற ஒரு அமைப்பு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் சுயாதீனத் திரைப்பட விழாவினை நடத்திவருகிறது.