close
Choose your channels

ராகுல் காந்தி பதட்டமானவர்… ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறார்…  இது ஒபாமாவின் விமர்சனம்!!!

Friday, November 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகுல் காந்தி பதட்டமானவர்… ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறார்…  இது ஒபாமாவின் விமர்சனம்!!!

 

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். A Promised Land எனும் அந்தப் புத்தகத்தில் பல உலக நாடுகளின் தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் தான் சந்தித்த உலகத் தலைவர்களைப் பற்றியும் அவர்கள் மீது தனக்கு இருக்கும் விமர்சனத்தைப் பற்றியுமே ஒபாமா அந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த புத்தகத்தில் ராகுல் காந்தி பற்றிய குறிப்புகளும் இடம் பெற்று இருக்கிறது. அந்தக் கருத்துதான் தற்போது இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி குறித்து, “ஒரு பதற்றமான நபர், தெளிவற்றவர், அவர் ஒரு மாணவர் போன்றவர். தனது டீச்சர் முன்பு அவர் பெயர் எடுக்க ஆர்வமாக இருக்கிறார். அதை மட்டுமே அவர் விரும்புகிறார். அவர் முழுமையான சுய தயாரிப்புகளை செய்வது இல்லை. ஆழமாக கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் திறமையும் அவரிடம் இல்லை” என்று ஒபாமா விமர்சனம் வைத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ராகுல் காந்தியும் ஒபாமாவும் டெல்லியில் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பை குறிப்பிட்டுத்தான் ஒபாமா இப்படி விமர்சனம் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த விமர்சனம் தற்போது இந்திய ஊடகங்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

மேலும் முன்னாள் பிரதமர் பிமன்மோகன் சிங் குறித்தும் ஒபாமா தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதில், “மன்மோசன்சிங் பொருளாதார நிபுணர், மிகவும் அமைதியான நபர். தனது முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர் கிடையாது” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல ரஷ்ய அதிபர் புடின் பற்றி, “புடின் மிகவும் வலிமையான நபர். அரசியல் நுட்பங்களை தெரிந்தவர். அரசியல் ரீதியாக புடின் மிகவும் வலிமையான நபர்” என்றும் விமர்சித்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.