எவர் க்ரீன் யூத்… ரசிகர்களிடம் கெத்தா சொல்லிக் கொள்ளும் நடிகை ராய்லட்சுமி புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,September 30 2021]

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தாம் தூம்” திரைப்படத்தில் வழக்கறிஞராக அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். பின்னாட்களில் அஸ்ட்ராலஜி காரணமாக தன்னுடைய பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில படங்களில் மட்டும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ராய்லட்சுமி பின்னர் கிளாமர் காட்ட துவங்கிவிட்டார். இதனால் “இரும்பு குதிரை“, இரும்புக்கோட்டை“, “மங்காத்தா“ போன்ற திரைப்படங்களில் எல்லைமீறிய கவர்ச்சியில் நடித்து இருந்தார். இதற்கு மாறாக பேய் த்ரில்லர் வகை படங்களான “அரண்மனை“, “காஞ்சனா“ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கலவரமாக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு, இந்தி சினிமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவந்த இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பேய் மற்றும் த்ரில்லர் வகையறா படமான “சிண்ட்ரெல்லா“ திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகை ராய் லட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி பிகினி உடையில் இருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது புதிதல்ல என்றாலும் தற்போது முதல்முறையாக தன்னுடைய இளமை தோற்றத்தைக் குறித்து “Forever Young“ என்ற கேப்ஷனை பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனாலும் நடிகை ராய் லட்சுமியின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த ரசிகர்கள் உங்களுக்கு 32 வயது ஆகிறது என்றால் நம்பவா முடியும். நீங்கள் எப்போதும் ஹாட் மற்றும் இளமையாகத்தான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More News

டிக்டாக் இலக்கியா படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

டிக் டாக் மூலம் இலக்கியா 'நீ சுடத்தான் வந்தியா' என்ற படத்தில் நடித்து வந்தார் என்பதும், இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

கணவருடன் குத்தாட்டம் போடும் விஜய் பட நாயகி… வைரல் வீடியோ!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு

துப்பாக்கியுடன் பைக் ஸ்டண்ட் செய்யும் குறும்புக்கார யூத்ஸ்… அலற வைக்கும் புகைப்படம்!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சில குறும்புக்கார இளைஞர்கள் ஓடும் பைக்கில் கையை விட்டுவிட்டு,

'மாநாடு' டிரைலரை ரிலீஸ் செய்யும் 4 மொழி பிரபலங்கள்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு'.

அக்னி குஞ்சொன்று கண்டேன்: 'ருத்ர தாண்டவம்' படத்திற்கு பிரபல இயக்குனர் பாராட்டு!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த அரசியல்வாதிகள் சிலர் பாராட்டு தெரிவித்து