நீ உயிரோட இருக்கணும்ன்னா இந்த உடையை எரிக்கணும்: 'சிண்ட்ரெல்லா' டிரைலர்

  • IndiaGlitz, [Wednesday,September 08 2021]

தமிழ் சினிமா உள்பட உலக சினிமாவில் பேய் பலவிதமான ரூபத்தில் பேய் வரும் என்பதை பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் விரைவில் வெளியாக கூடிய ராய்லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ என்ற படத்தில் ஒரு ஆடை வடிவத்தில் பேய் வருகிறது.

ஒரு பஜாரில் மிகவும் ஆசைப்பட்டு சிண்ட்ரெல்லாவின் உடையை வாங்கும் ராய்லட்சுமி அதன்பின் அந்த ஆடையால் ஏற்படும் பிரச்சினைகள், அந்த ஆடையின் பழிவாங்கல்கள், கொலைகள் ஆகியவை தான் இந்த படத்தின் கதை என்பது தெரிகிறது.

இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லரின் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வினோ வெங்கடேசன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராய்லட்சுமி, பிக்பாஸ் சாக்சி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அஸ்வமித்ரா என்பவர் இசையமைத்துள்ள இந்த படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திகில் கதையம்சம் கொண்ட இந்த பேய் படம், பேய் பட ரசிகர்களை திருப்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கணவன் செய்தால் மட்டும் பலாத்காரம் இல்லையா? சர்ச்சையை கிளப்பும் தீர்ப்பு!

அண்மையில் சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் “சட்டப்பூர்வமான மனைவியை அவரது கணவன் வற்புறுத்தி உடலுறவு கொள்வது

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக “பாகுபலி“ நடிகரிடம் விசாரணை!

பிரபல தெலுங்கு நடிகர் ராணா “பாகுபலி“ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அவரிடம் அமலாக்கத்துறை போதைப்பொருள்

திரை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: இளையராஜாவின் இரங்கல் செய்தி!

புரட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பல திரைப்படங்களுக்கு ஆழ்ந்த அர்த்தமுள்ள திரைப்பட பாடல்களை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் என்பதும்,

மாஸ்கோவில் தல அஜித்: லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவில் நடைபெற்றது என்பதும் அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேஸ் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்த

'சூரரை போற்று' இந்தி ரீமேக்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சூர்யா நடித்த 'சூரரை போற்று' படத்தின் இந்தி ரீமேக் குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.