வண்ண வண்ண பிகினி உடைகளில் நடிகை ராய்லட்சுமி: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,July 04 2021]

’கற்க கசடற’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராய்லட்சுமி அதன்பின்னர் விஜயகாந்தின் ’தர்மபுரி’ பிரகாஷ்ராஜின் ’வெள்ளித்திரை’, ஜெயம் ரவியின் ‘தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் ராகவா லாரன்ஸின் ’காஞ்சனா’ அஜித்தின் ’மங்காத்தா’ உள்பட சூப்பர் ஹிட் படங்களில் பிசியான நடிகையாக இருக்கும் ராய்லட்சுமி தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் மூன்று படங்கள் தமிழ் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராய்லட்சுமி சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறர் என்பதும் அவற்றில் பெரும்பாலும் பிகினி புகைப்படங்களாகத்தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று வண்ண வண்ண பிகினி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராய்லட்சுமி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு அவர் கேப்டனாக ’நான் காடுகளின் ராணி’ என்றும் ’ஒரே ஒரு வாழ்க்கை தான் அதை முழுமையாக வாழ்ந்து விடுங்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார்.