தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் எப்படி இருக்கும்??? இந்திய வானிலையின் விரிவான அறிக்கை!!!

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

 

வங்காள விரிகுடா பகுதியில் உள்ள தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்துக்குள் அது குறைந்த அழுத்தமாகவும் அதுவே 24 மணி நேரத்தில் புயலாகவும் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தப் புயல் 18 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது.

இதன் காரணமாக இன்று முதலே தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நாளை மற்றும் புதன் கிழமைகளில் தமிழகத்தின் சில கடற்கரை மாவட்டங்களில் கனமழை மதல் மிக கனமழை பெய்யலாம் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்தப் புயல் சீற்றம் காரணமாக வரும் நவம்பர் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி அன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25 ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த புயலின் காரணமாக மக்களின் வீடுகளும் சொத்துகளும் கடுமையாகச் சேதப்படும். எனவே பாதிப்பு உள்ள பகுதிகளில் மக்கள் சாதுரியமாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். இதனால் மக்கள் குடிப்பதற்கு தேவையான நீரை போதுமான அளவு சேமித்து வைத்துக் கொள்ளுமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக நிவர் புயலைப் பற்றி தகவல் அளித்த சென்னை வெதன்மேன் இந்தப் புயல் 2 விதமாக கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி இருந்தார். அதில் வேதாரண்யம்-காரைக்காலுக்கு மத்தியில் 24 அல்லது 25 ஆம் தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கலாம். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 70-80 கி.மீ ஆக இருக்கும். இதனால் திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்து இருந்தார். மேலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.

இன்னொரு விதமாக காரைக்கால்-சென்னைக்கு மத்தியில் 24-25 ஆம் தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கும். அது மணிக்கு 120-150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றாக வீசும். கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யலாம். மேலும் கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்யும் எனக் கூறி இருந்தார்.

More News

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: டிஆர் தோல்வி, வெற்றி பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது என்பதும் மொத்தம் 1303 வாக்குகள் என்றாலும் 1050 பேர்கள் மட்டுமே வாக்களித்தனர் என்பது தெரிந்ததே.

மீனவர்களிடையே பரவும் சிகிச்சையே இல்லாத மர்மநோய்… பீதியைக் கிளப்பும் புதுத் தகவல்!!!

கொரோனா தொற்று ஆரம்பித்து 11 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் பல உலக நாடுகள் தவித்து வருகின்றன.

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 7 பேர்: என்னென்ன பட்டப்பெயர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடைபெறும் நிலையில் இன்றைய நாமினேஷன் படலம் குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இடம்பெற்றுள்ளன.

மீண்டும் களமிறங்கும் சிம்மசொப்பனம் சுரேஷ்? சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தியின் தந்திரமான விளையாட்டை இதுவரை எந்த போட்டியாளரும் கடைபிடித்ததில்லை

சம்யுக்தா பெயரை சொன்ன பாலாஜி: கடுப்புடன்  முறைத்த சுசி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவிருக்கும் நிலையில் நாமினேஷன் செய்யப்பட்ட அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ரியோ, பாலாஜி மற்றும் சுசி ஆகியோர்களில்