close
Choose your channels

சாலையில் பொழிந்த திடீர் பணமழை… துள்ளிக்குதித்த வாகன ஓட்டிகள்!

Monday, November 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் உள்ள சாலையொன்றில் திடீர் பணமழை பொழிந்துள்ளது. இதைச் சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டிகள் நடு சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ உலகம் முழுவதும் கவனம் ஈர்த்திருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ பகுதியில் இயங்கிவரும் உள்ளூர் வங்கியில் இருந்து சேகரிக்கப்பட்ட பணம் அந்நாட்டின் FBI அலுவலகத்திற்கு வாகனத்தின்மூலம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த வாகனம் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது அதன் கதவுகள் திடீரென திறந்துள்ளது.இதனால் வாகனத்தில் இருந்து லட்சக்கணக்கான டாலர் நோட்டுகள் சாலையில் பறந்துள்ளன.

இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு டாலர் நோட்டுகளை அள்ளத்துவங்கினர். மேலும் அந்தப் பகுதியில் சாலை முழுவதும் பணத்தால் நிரம்பிய காட்சி பலரையும் வியக்க வைத்திருக்கிறது. சிலர் டாலர் நோட்டுகளைத் தங்களது கைகளில் அள்ளி வீசியும் எறிந்தும் விளையாடியுள்ளனர். இந்த வீடியோ உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.