close
Choose your channels

புல்வெளி தரையில் ப்ளூ நிற நீச்சல் உடை… வேறலெவல் கிளாமரில் நடிகை ரைசா வில்சன்!

Thursday, June 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது யாதார்த்தமான கேரக்டர் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் ரைசா வில்சன். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கதாநாயகிகளுள் ஒருவராக இருந்துவரும் நிலையில் இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.

மாடலிங் துறையில் கவனம் செலுத்திவந்த ரைசா வில்சன் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேயில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நிலையில் தன்னுடைய சக போட்டியாளர்களுள் ஒருவராக இருந்த ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தில் நடித்திருந்தார். 2018 இல் வெளியான இந்தத் திரைப்படம் நடிகை ரைசாவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில் ‘தனுசு ராசி நேயர்களே‘, ‘வர்மா‘, ‘எஃப்ஐஆர்‘, ‘பொய்க்கால் குதிரை‘, ‘காபி வித் காதல்‘ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ‘அட்லவ்‘, ‘தி சேஸ்‘, ‘அலிஸ்‘, ‘காதலிக்க யாருமில்லை’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவைத் தவிர சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரைசா வில்சன் அடிக்கடி கிளார் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது நடிகை ரைசா பகிர்ந்துள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அதில் நீல நிறத்தில் நீச்சல் உடை அணிந்திருக்கும் நடிகை ரைசா புல்வெளி தரையில் படுத்திருப்பது போன்று காட்சியளிக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘அழகி’, ‘குயின்’ என்றெல்லாம் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.