close
Choose your channels

இந்தியன் ஏஞ்சலினா ஜோலி.. மொட்டை மாடி நீச்சல் குளத்தில் பிக்பாஸ் ரைசா வில்சனின் கிளாமர்..!

Saturday, April 26, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரைசா வில்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் இருக்கும் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படங்களுக்கு ’இந்தியன் ஏஞ்சலினா ஜோலி’ என கமெண்ட்ஸ்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் மூலம் தமிழ் திரையுலகில் நடிப்பை தொடங்கிய ரைசா வில்சன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அதிக வாய்ப்புகளை பெற்றார். குறிப்பாக, ’பியார் பிரேமா காதல்’, ’தனுசு ராசி நேயர்களே’, ’எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், தற்போது அவர் ’தி சேஸ்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன், ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை வைத்துள்ளார். அந்த வகையில், சற்று முன்னர் அவர் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் பின்னணியில், ஒரு பெரிய கட்டிடத்தின் மொட்டைமாடியில் இருக்கும் நீச்சல் குளத்தில் விதவிதமான போஸ்களில் பிகினி உடையுடன் கூடிய புகைப்படங்களை எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை அவர் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன என்பதும், அவரை வர்ணித்து பலவிதமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஒருவர், ’இந்தியன் ஏஞ்சலினா ஜோலி’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment