'பாகுபலி' படக்குழுவினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் புதிய சாதனை செய்து வருகிறது. எந்த ஒரு இந்திய திரைப்படமும் இதுவரை செய்யாத, செய்ய முடியாத வசூலை இந்த படம் செய்துவிடும் என்றும் அதாவது ரூ.1000 கோடி மொத்த வசூலை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்காக சுமார் ஐந்து வருடம் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது குடும்பத்துடன் கடுமையாக உழைத்தார் என்றும் தெரிந்ததே. இந்த படத்தில் அவரும் ஒரு பார்ட்னர் என்பதால் அவரது தரப்பு வருமான தொகை ரூ.100 கோடியை தாண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபாஸ்: சுமார் ரூ.50 கோடி

ராணா: ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி

அனுஷ்கா: ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி

தமன்னா: ரூ. 3 கோடி

ரம்யாகிருஷ்ணன்: சுமார் ரூ.3 கோடி

சத்யராஜ்: ரூ.3 கோடி முதல் 4 கோடி

நாசர்: ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை

மேற்கண்ட அனைவருமே இந்த படத்திற்காக இரவுபகல் பாராது உழைத்த கடின உழைப்பிற்கு கிடைத்த ஊதியமே ஆகும். மேலும் இந்த படம் இன்னும் 100 வருடத்திற்கு மேலும் பேசப்படும் என்பதால் இந்த படத்தில் பங்கு பெற்றதால் கிடைத்த, கிடைக்க போகும் புகழ்தான் அவர்களது விலைமதிப்பில்லா ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பாகுபலி 2' படத்தின் 4 நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பிரபல நகைச்சுவை நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் நட்சத்திரங்களும் விரும்புவதுண்டு. வளர்ந்து வரும் இளையதலைமுறை நட்சத்திரங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் இருந்து வருவதே இதற்கு காரணம்...

'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி கடந்த இரண்டு வருடங்களாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது...

அதிமுகவில் மேலும் ஒரு புதிய அணி: எடப்பாடியார் ஆட்சி நீடிக்குமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி-ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின்னர் சசிகலா அணி தினகரன் அணியாக மாறியது. தற்போது தினகரன் சிறைக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி அணியாக உள்ளது...

சொன்னதை செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால்! வாழ்த்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று புதிய மற்றும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பது தான்...