close
Choose your channels
seethakathi

ஒரே நிறுவனத்தின் கீழ் ரஜினி, அஜித், விஜய் படங்கள்?

Friday, September 7, 2018 • தமிழ் Comments

ரஜினி, அஜித் ,விஜய் ஆகிய மாஸ் நடிகர்களின் படங்களை தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவது தெரிந்ததே. இந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் ஒரே நேரத்தில் ரஜினியின் 'கபாலி' மற்றும் விஜய்யின் 'தெறி' ஆகிய இரண்டு படங்களை தயாரித்து இரண்டு படங்களையும் வெற்றிப்படமாக்கினார்.

இந்த நிலையில் தற்போது அதேபோல் ரஜினியின் 165வது படம் மற்றும் விஜய்யின் 'சர்கார்' ஆகிய இரண்டு மாஸ் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த இரண்டு படங்களும் நிச்சயம் மாஸ் வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தமிழ் திரையுலகில் ரஜினி, அஜித், விஜய் என மூன்று மாஸ் படங்களை வெளியிடும் நிறுவனம் என்ற பெருமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.