ரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா?

சமீபத்தில் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள கமலஹாசனையும், விரைவில் அரசியலில் களம்புகவுள்ள ரஜினிகாந்த் அவர்களையும் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே சமீபகாலமாக விமர்சனம் செய்து வருகின்றன. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் எதிரெதிர் கட்சிகள் என்றாலும் ரஜினி-கமலை எதிர்ப்பதில் இரண்டு கட்சிகளும் ஒற்றுமையுடன் உள்ளன

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் நேரடியாகவே விமர்சனம் செய்தார். அதேபோல் திமுகவில் உள்ள முன்னணி தலைவர்களும் கமல், ரஜினி ஆகீய இருவரையும் விமர்சனம் செய்து வருகின்றனர் 

இந்த நிலையில் இரண்டு திராவிட கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து, வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. அதனை நேற்று ’கமல்ஹாசன் 60’ விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும் குறிப்பிட்டார் 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை ரஜினியும் கமலும் இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ரஜினி-கமல் தரப்பில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 

எஸ்ஏ சந்திரசேகர் விருப்பப்படி ரஜினி, கமல் இணைந்து தேர்தலை சந்தித்தால், இந்த கூட்டணிக்கு விஜய் ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்து வரும் இரண்டு திராவிட கட்சிகளை எதிர்க்க ஒரு வலிமையான கூட்டணி தேவை என்பதால் ரஜினி, கமல், விஜய் என மூவரும் இணைய வேண்டும் என்பதே இரு திமுக, அதிமுக கட்சிகளின் எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

More News

2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண், இரண்டு இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளதால் அவரது கணவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ஆட்சி செய்தது போதும் என்று நினைத்த பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டுமென்றும்

விமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவிருப்பதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அறிவித்ததில் இருந்து அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம்

கமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்: விஜய்சேதுபதி

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து நேற்று அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 'கமலஹாசன் 60' என்ற பெயரைக் கொண்ட

விஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'தளபதி 64' படத்தில் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்.