close
Choose your channels

ரஜினியின் '2.0' படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஒரு ஆச்சரியமான தகவல்

Wednesday, September 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள '2.0' திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடி என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் அதிக பட்ஜெட் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.

ஆனால் இந்த படத்தின் பட்ஜெட், கிராபிக்ஸ் பணிகளால் இன்னும் உயர்ந்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவலை பட நிறுவனமே வெளீயிட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 75 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

இன்றைய டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பின்படி பார்த்தால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.545 கோடியாகும். ரூ.500 கோடியை தாண்டிய முதல் இந்திய திரைப்படம் இதுதான் என்பதும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் கிராபிக்ஸ் இந்த படத்தில் இருப்பதால் இந்த படம் உலக அளவில் பேசப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே உலகம் முழுவதும் சுமார் 3000 டெக்னீஷியன்கள் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமா வரலாற்றில் '2.0' திரைப்படம் அடுத்த பரிணாமமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.