'அண்ணாத்த' ஃபர்ஸ்ட்லுக் தேதி: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கேற்றவாறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்’அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் ஆகஸ்ட் 12ம் தேதி இயக்குனர் சிறுத்தை சிவாவின் 44-வது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.