close
Choose your channels

ரஜினியின் 'கூலி' படத்துடன் கனெக்சன் ஆகும் தனுஷின் 'குபேரா'.. வைரல் போஸ்டர்..!

Saturday, May 10, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தில் அவர் நடித்த அதே கேரக்டர் பெயரில்தான் 'குபேரா' படத்தில் தனுஷ் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இரண்டு படத்திற்குமான ஆச்சரியமான ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தில் தேவா என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' படத்தில் மம்முட்டி நடித்த கேரக்டர் பெயரும் தேவா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் தனுஷ் நடித்த 'குபேரா' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுஷ் திரையுலகில் அறிமுகமாகிய 23 ஆண்டுகள் ஆனதை அடுத்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வெளியான இந்த போஸ்டரில், தனுஷ் தேவா என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 'கூலி' படத்தில் ரஜினி, 'குபேரா' படத்தில் தனுஷ் ஆகிய இருவருமே தேவா கேரக்டரில் நடிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான கனெக்சனாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ப்ரமோஷன் பணிகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய இந்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment