close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' டீசர் விமர்சனம்

Wednesday, December 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சற்றுமுன் அவர் நடித்த 'பேட்ட' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த படங்களில் இரண்டு விஷயங்கள் மிஸ் ஆகின. அவை மாஸ் ஓப்பனிங் காட்சி மற்றும் ஓப்பனிங் பாடல். ரஜினியை இயக்கிய இயக்குனர்கள் இந்த இரண்டையும் வேண்டுமென்றே தவிர்த்ததாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் ஒரு ரஜினி ரசிகரே, 'பேட்ட' படத்தை இயக்கியுள்ளதால் மீண்டும் மாஸ் ஓப்பனிங் காட்சியும் ஓப்பனிங் பாடலும் இந்த படத்தில் இருக்கும் என்பதையே இந்த டீசர் ரசிகர்களுக்கு விளக்கியுள்ளது. ரஜினியின் இளமை, முதுமை ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் சில மாஸ் காட்சிகள் அடங்கிய இந்த டீசர் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துளது. குறிப்பாக பிளாஷ்பேக் வேஷ்டி, சட்டை காஸ்ட்யூமில் வரும் இளமை ரஜினி துள்ளலுடன் இருப்பது 80கள், 90களில் உள்ள ரஜினியை பார்ப்பது போன்று உள்ளது.

ரஜினியின் நடை, ஸ்டைல், பாடி லேங்குவேஜ் எதையும் மிஸ் பண்ணாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம் மரண மாஸ் வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.