மார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக அண்ணாத்த’ படத்துடன் இன்னொரு படத்திலும் நடிக்க திட்டமிட்டு உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை பார்த்தோம். இந்த நிலையில் ’தலைவர் 169’ என்கிற அந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நீண்ட இடைவேளைக்குப்பின் ரஜினி-கமல் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மார்ச் 5ம் தேதி ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் இந்த ரஜினியை இயக்கும் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ரஜினி கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் கே பாலச்சந்தர் இயக்கிய ’நினைத்தாலே இனிக்கும்’.அதன்பிறகு 41 வருடங்கள் கழித்து தற்போது தான் மீண்டும் இருவரும் திரைகள் இணைகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது. ஏற்கனவே ரஜினி கமல் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக திரையுலகில் இருவரும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்" – நடிகை ராஷ்மிகா மந்தனா

தன்னை விட வடிவேலு கியூட்டாக இருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவு ரசிகர்களிடையே தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெட்ரோல் பங்கில் தீ- தனி ஆளாய் தீயை அணைக்கும் சிங்கப் பெண் வைரல் வீடியோ

பெண்களின் வீரத்தை மையப்படுத்தி பிகில் படத்தில் வரும் “சிங்கப் பெண்ணே“  பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது

'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்

சூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்!

சூர்யா தற்போது 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் விரைவில் அவர் ஹரி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

விஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்குவார் என ஏற்கனவே அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.